யால தேசிய சரணாலயம் வரலாற்றில் அதிகளவான வருவாயை ஈட்டியது

0
311

யால தேசிய சரணாலயத்தின் வரலாற்றில் அதிகளவான வருவாய் நேற்று ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய, ஒரு கோடியே 2 இலட்சத்து 64 ஆயிரத்து 179 ரூபா வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.நேற்றைய உள்ளூர் சுற்றுலா பயணிகளை விடவும் அதிகளவான சர்வதேச சுற்றுலா பயணிகள் யால தேசிய சரணாலயத்துக்கு சென்றுள்ளனர்.இதன்படி 912 சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் 682 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் யால தேசிய சரணாலயத்திற்கு சென்றுள்ளனர்.கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் நேற்று வரையில் யால தேசிய சரணாலயத்தினை பார்வையிடுவதற்காக அதிகளவானோர் அங்கு சென்றிருந்ததாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.