
அதிக மதுபாவனையால் யாழ்ப்பாணம் இளவாலையை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கீரிமலை – கொலனியை சேர்ந்த 47 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
குடும்பப் பிரச்னையால் இளவாலை – வசந்தபுரத்தில் தனியாக வசித்து வந்த உயிரிழந்த நபர், நேற்று அவர் வசித்து வந்த காணியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனையில் அதிக மதுபாவனையால் நுரையீரல் பாதிக்கப்பட்டே அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.