இளம் யுவதிகளுக்கு உற்சாகம் கொடுத்த மூதாட்டியின் செயல்!
யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைகளில் ஒன்றான சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியில் கடந்த வாரம் இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ். சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் மாணவர்களின் பல்வேறு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குறித்த விளையாட்டு போட்டியில் பழைய மாணவர்களிற்கான 400 m ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது.
அந்த ஓட்டப்போட்டி நிகழ்வில் அப்பாடசாலையின் பழைய மாணவிகள் பலர் பங்குபற்றி இருந்தனர்.
குறித்த பாடசாலையில் கல்விகற்ற 75 வயதுடைய புனிதவதி என்ற மூதாட்டி ஒருவர் கலந்து கொண்டு சிறப்பு பரிசினை தட்டி சென்றுள்ளார்.