யாழ். கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு பெண்களும் சிறுவன் ஒருவனுக்குமே கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
64 மற்றும் 39 வயது பெண்கள் இருவருக்கும் 14 வயது சிறுவனுக்கும் இவ்வாறு கொரோனா தொற்றுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கொழும்பு, பேலியகொடை மீன் சந்தைக்குச் சென்று வந்தவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது. அந்நபர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் உறவினர்கள் மூவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் ஒரு வாரத்துக்கு மேலாக சுயதனிமைப்படுத்தலில் வைத்து கண்காணிக்கப்பட்டவர்கள். அவர்களிடம் மாதிரிகள் பெறப்பட்டு யாழ். போதனா மருத்துவமனையில் நேற்று இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.