தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை மற்றும் கடும் காற்று காரணமாக யாழ்.மாவட்டத்தில் இதுவரை 156 குடும்பங்களைச் சேர்ந்த 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்தோடு யாழ்ப்பாணம் – சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் காணாமல்போயுள்ளார்.அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
கடந்த 12 மணித்தியாலமாக தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ்.மாவட்டத்தில் 83 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
நவாலி கல்லுண்டாய் பகுதியில் இடைத்தங்கல் முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சண்டிலிப்பாய் மற்றும் சாவகச்சேரி பகுதிகளிலேயே அதிக வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.