முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளினால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள மனித சங்கிலி ஆர்பாட்டம் வெற்றி அளிப்பதற்கு, தமிழ் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மருதனார்மடம் சந்தியில் நாளை காலை 9 மணிக்கு ஆரம்பம் ஆகும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி முட்டாஸ் கடை சந்தியில் காலை 10 மணியளவில் நிறைவடையவுள்ளது.
எனவே அனைத்து தமிழ் மக்களும் கட்சி பேதங்களை கடந்து எமது முழுமையான எதிர்ப்பினை காட்டும் முகாமாக குறித்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சி.வி.கே.சிவஞானம் அழைப்பு விடுத்துள்ளார்.