யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் கொடிகாமத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று முற்பகல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்ரீPலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சாவகச்சேரி மற்றும் கொடிகாமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமாறுகோரும் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.