வடமராட்சியில் நேற்று இரு குழுக்களிடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் படுகாயங்களுக்கு இலக்காகியுள்ளனர் என்று அறிய வருகின்றது.
வடமராட்சி – பருத்தித்துறை – சுப்பர்மடத்திலேயே இன்று புதன்கிழமை பிற்பகல் வேளை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியில் பயணித்த ஒருவருக்கும் சுப்பர்மடம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு வந்த சிலர் கைகலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றது.
இதில், இரு தரப்பிலும் தலா மூவராக ஆறு பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.