மீன்பிடித் தடைக்காலத்தின் பின்னர் இந்திய இழுவை மடிப்படகுகளின் அட்டகாசம் மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமக்கான திர்வை வலியுறுத்தியும் நாளை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம்,
யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்பின் சம்மேளனம் , வட மாகாண மீனவர் சமாசம் ஆகியன இணைந்த இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தன.