யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இராமநாதன் அர்ச்சுனா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீபவானந்தராஜா, யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதியின் வருகைமுன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலக சுற்றுவட்டப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

