- ரணில் சிறந்தவர் என்று கூறி அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவரை ஜனாதிபதியாக்கிக் காட்டுமாறே தாம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துறைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் முரண்பாடு, ஐக்கிய மக்கள் சக்தியின் தரப்பினர் அரசாங்கத்துடன் இணைந்துகொள்வர் உள்ளிட்ட விடயங்களே இன்றையே பேசு பொருளாக மாறியுள்ளன.
ராஜபக்ஷர்களும் இரண்டாக பிளவுபட்ட ஐக்கிய தேசியக் கட்சியினரும் இணைந்து பொய்யான கதைகளைக் கூறி மீண்டுமொருமுறை அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கான ராஜபக்ஷர்களின் கனவை நணவாக்குவதற்கான அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.