ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுமாயின் அம்மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரோஹித அபேகுணவர்தனவுக்கு அமைச்சுப் பதவியை வழங்காது ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுற்தியுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.