வசந்த முதலிகேவை விடுதலை செய்ய வலியுறுத்தி நுவரெலியாவில் கையெழுத்துப் போராட்டம்!

0
115

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக நேற்று கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கோட்டா கோ கம கிளை இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சில சிவில் அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கையொப்பம் இடும் நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் திணேஷ் கிருசாந்த, நுவரெலியா மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு கையொப்பமிட்டனர்.