வடக்கில் உயிரிழந்த கால்நடைகளுக்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை!

0
119

வடக்கில் காலநிலை சீரின்மையால் உயிரிழந்த கால்நடைகளுக்கு நஷ்ட ஈடு பெற்று கொடுப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்திசுகாதார திணைக் களப்பணிப்பாளர் தெரிவித்தார்

 இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் நிலவிய சீற்ற காலநிலையினால் 500 க்கும்  மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்திருந்தன அந்த உயிரிழந்த கால்நடைகள் உரிமையாளர்களுக்கு உரிய நஷ்டஈட்டினை பெற்று கொடுப்பதற்குரிய நடவடிக்கை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்

கால்நடை உரிமையாளர்களுக்கு அந்த நஷ்ட ஈட்டை விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் மேலும் உயிரிழந்த கால்நடைகளில் பல கால்நடைகள் பதிவில்லாத நிலையில் காணப்படுகின்றது 

எனவே உயிரிழந்த கால்நடை களின் பண்ணையாளர்கள் உயிரிழந்த கால்நடைகளின் பதிவிலக்கம் மற்றும் ஏனைய தரவுகளை உடனடியாக அந்தந்த மாவட்ட கால்நடைகள் த

திணைக் களத்துடன் தொடர்பு கொண்டு வழங்கும் இடத்து அவர்களுக்குரிய நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொடுக்க இலகுவாக இருக்கும்

வடக்கு ஆளுநருடைய   அறிவுறுத்தலில் வழிகாட்டலுக்கமைய  எங்களுடைய பிரதேசத்தில் கட்டாக்காலிகளாக அல்லது  திறந்தவெளிகளிலே உள்ள கால்நடைகளை பாதுகாப்பது தொடர்பாக சில நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இங்கே இருக்கின்ற கால்நடைகளின் பெரும் அளவிலே 80 வீதமான கால்நடைகள் திறந்தவெளி மூலமாகவே தமது உணவை பெற்றுக் கொள்ளுகின்றன  குறிப்பாக இங்கே உள்ள மாடுகள் குறைந்த உற்பத்திதிறனு  கொண்ட மாடுகள் ஆகவே காணப்படுகின்றன 

வடக்கு மாகாணத்தை பார்த்தால் வடக்கு மாகாணத்தில் வீரத்தால 4 இலட்சம் மாடுகளும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் அளவில் எருமை மாடுகளும் மூன்று லட்சத்துக்கு குறைவான ஆடுகளும் வளர்க்கப்பட்டு வருகிறது இது ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடும்போது தொகையிலேயே மிக அதிகமான தொகையை காணப்படுகின்றது 

ஆனால் இந்த 4 லட்சம் நாடுகளில் ஏறத்தாழ 3 லட்சம்மாடுகள் பால் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுவதில்லை இவை பெரும்பாலும் திறந்த வெளிகளிலே மேச்சலுக்கு அனுப்பப்பட்டு தாங்கள் விரும்பிய இடங்களில் நீரை குடித்து வளர்ந்து வருகின்ற திறந்த வெளி வளர்ப்பு மாடுகளாக அதேபோல கலப்பின பெருக்கத்துக்கு பெரும்பாலும் உட்படாமல் நாட்டின மாடுகளாகவே கானப்படுகின்றமைதான் இவற்றின் பால் உற்பத்தி தன்மை  மிகக் குறைவாகவோ அல்லது இல்லை என்று சொல்லும் அளவுக்கு காணப்படுகின்றது 

இருந்தாலும் இந்த கால்நடைகளை  வளர்க்கின்ற பண்ணையாளர்களுக்கு இது வருமானத்தை ஈட்டுவததற்கு காரணம் இலங்கையிலே இறைத்தேவையில் 30 வீதமான இறைச்சித்தேவையில்  30 விதமான பங்கு வடக்கு மாகாணத்தில் இருந்து 35 வீதமானமை கிழக்கு மாவட்டத்திலிருந்து தான்  பூர்த்தி செய்யப்படுகின்றது

 ஆகவே வருடாந்தம் மிக அதிகளவான கால்நடைகளை இறைச்சிக்காக  அனுப்பி எங்களுடைய பண்ணையாளர்கள் மிக அதிகளவான வருமானத்தை பெற்றுக் கொண்டிருப்பதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது 

எனினும் இவ்வாறான திறந்த வெளி வளர்ப்பு முறைகள் தொடர்ந்து நம்மால் மேற்கொள்ள முடியுமா என்று கேள்வி ஏற்பட்டுள்ளது எங்களுடைய தோட்டங்கள் வயல்கள் போன்றவை செய்யப்படாத நிலம் அனைத்தும் எதிர்காலத்திலே அல்லது தற்பொழுது இருப்பதே விவசாயிகளுக்கு பயன்படுத்த வேண்டுமா விவசாய உற்பத்திகளை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கமைய அவற்றினை விவசாய தேவைகளுக்கு படிப்படியாக பயன்படுத்தி வருகின்ற நிலையிலே கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் அல்லது இவற்றுக்கான உணவுகளை பெற்றுக் கொள்வதில் பண்ணையாளர்கள் ப சிரமங்களை எதிர் நோக்குகின்றார்கள் 

அது மட்டுமல்ல நிலங்களில் பயிற்செய்கையில் ஈடுபடும்போது மாடுகள் கிளிநொச்சிமுல்லை தீவு மன்னார் போன்ற பிரதேசங்களிலே முக்கியமாக இந்த மாடுகள் அவை சாதாரண பண்ணையாளர்களுடைய வீடுகளுக்கு அண்மையில் அடைத்து வைக்கப்பட்டு  மாடுகள் இந்த காலப்பகுதியிலே அவற்றிலிருந்து மிகவும் தொலைதூரமான இடங்களிலே பாதுகாப்பாக இல்லாத காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய இடங்களில் நல்ல நீர் கிடைக்காத இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுகின்றன

 ஏனென்றால் அவர்கள் இந்த வயல்களை நாசமாக்கிவிடும் என்ற காரணத்தினால் பண்ணையாளர்கள் அந்த கால்நடைகளை வேறு இடங்களுக்கு மாற்றுவார்கள் இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக 19ஆம் ஆண்டிலிருந்து 21 ஆம் ஆண்டிலும் தற்பொழுது 22 ஆம் ஆண்டிலும் பல்வேறு காரணங்களினால் இந்த கால்நடைகள் பெரும் அளவில் இறந்துள்ளது 

 நீர்நிலைகள் வற்றி போவதனால் கோடை காலங்களில் இருக்கின்ற ஒரு பிரச்சனை அவற்றை விட கடும் மழை பெய்கின்ற காலத்திலே வெள்ளப்பெருக்கிலே மாட்டுப்பட்டு ஆயிரக்கணக்கான மாடுகள் அந்த காலத்திலே இறந்திருக்கின்றன

 தற்பொழுது முதல் தடவையாக கடந்த 25 30 ஆண்டுகளுக்குள் இவ்வாறான ஒரு செய்தி எமக்கு கிடைக்கவில்லை அதாவது குளிர் தாக்கத்தினால் மாடுகள் இறந்துள்ளன இந்த மாடுகள் ஏன் குளிரால்   இறந்ததென்றால் இந்த மாடுகால் பெரும்பாலான மாடுகளிலே 90வீதமான மாடுகளிலே உடம்பில் குளிர் தாங்க கூடிய அளவிற்கு கொழுப்பு படைகள் இல்லை கொழுப்பு படை இல்லாமைக்கு முக்கியமான காரணம் கால்நடைகளுக்கு இந்த காலப்பகுதியில் பெரும்போககாலப் பகுதியில் போதுமான தீவனங்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை இதன் காரணமாக உடம்பில் கொழுப்பு படைகள் இல்லாத மாடுகள் இந்த குளிர் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர் இதன்  காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்