24 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வடமராட்சி – மருதங்கேணி பாலத்தின் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது

உடையும் அபாய நிலையில் காணப்பட்ட வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பாலத்தின் இரு முனைகளிலும் மணல் மூடைகள் அடுக்கப்பட்டு பாலத்தின் ஊடான போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பாலத்தின் இரு பகுதிகளும் மண் அரிக்கப்பட்டதன் காரணமாக பாலம் உடையும் அபாய நிலையில் காணப்பட்டது.

இது தொடர்பில் விரைந்து செயற்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், செம்பியன்பற்று இராணுவ இராணுவத்தினரின் உதவியுடன் மண் அரிப்பு ஏற்பட்ட இரு பகுதிகளிலும் மணல் மூடைகளை அடுக்கி பாலத்தின் ஊடான போக்குவரத்தை சீர்செய்துள்ளனர்.

இருப்பினும் கனரக வாகனங்கள் பயணிப்பதனை இயன்றவரை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு தெரியப்படுத்தியிருப்பதாக மருதங்கேணி பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொடுக்கிளாய் – இயக்கச்சி பாதையில் இருக்கும் அபாய வெளியேற்றப் பாதை, அதிகரித்த வெள்ளம் காரணமாக முழுமையாக சேதமடைந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles