28.3 C
Colombo
Tuesday, December 5, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கைதுசெய்யுமாறுஅங்கஜன் எம்.பி கோரிக்கை!

மனித உரிமைகளை மதிக்கத் தெரியாத வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட வேண்டும்…அங்கஜன் எம்.பி

மனித உரிமைகளை மதிக்காது மிருகத்தனமாக செயற்பட்ட யாழ்ப்பாணம்-வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்-பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பாக வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தனது அறிக்கையில்;

சித்தங்கேணியைச் சேர்ந்த 26வயதான நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறான பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் யாழ் மாவட்டத்தில் இடம்பெறுவது இதுவே முதல் தடவை அல்ல. ஆனால் இதுவே இறுதிச் சம்பவமாக இருக்க வேண்டும்.

சந்தேக நபர்களை தாக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை. இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கே உண்டு. ஆனால் இங்கு பொலிஸார் சந்தேக நபர்களை வலுக்கட்டாயமாக குற்றவாளிகளாக்கி விடுகின்றார்கள்.

சந்தேக நபர்களை மனிதராக மதிப்பதுமில்லை. மனித உரிமைகளை மதிக்கத் தெரியாத பொலிஸார் எந்தத் தருணத்திலும் பொலிஸாராக இருக்கத் தகுதியற்றவர்கள்.

வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்த இளைஞனை பொலிஸ் காவலரனில் வெளிப்படையாக காட்சிப்படுத்தவில்லை, இளைஞனின் குடும்பத்தாரிடம் இளைஞனை வெளிப்படுத்தவில்லை, எல்லாவற்றுக்கும் மேலாக 24மணித்தியாளத்திற்குள் நீதிமன்றில் முற்படுத்த வேண்டிய சந்தேக நபரை நான்கு தினங்கள் பிரத்தியேக மறைவிடம் ஒன்றில் வைத்து உணவு கொடுக்காது மிருகத்தனமாக தாக்கியுள்ளனர்.

இளைஞனது மரணத்திற்கு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சகல பொலிஸாரும் பொறுப்புக் கூற வேண்டும். உடனடியாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் இளைஞனது மரணத்துடன் தொடர்புபட்ட பொலிஸார் அனைவரது பதவிகளும் பறிக்கப்பட்டு – கைது செய்யப்பட்டு பக்கச்சார்பற்ற விசாரணை இடம்பெற்று தண்டனை வழங்கப்பட வேண்டும்.

யாழ்மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபர்களை மறைத்து வைத்து தாக்கி தமது வாக்குமூலங்களை திணிப்பதற்கான பிரத்தியேக இடங்கள் இருப்பதனை அறிய முடிகிறது.

மனித உரிமைகளை பேணும் நிறுவனங்கள் பலவும் செயற்பட்டு வரும் நிலையில் பொலிஸாரின் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. உயிரிழந்த இளைஞனது குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டிய அதேநேரம் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதனையும் உறுதி செய்ய வேண்டும் என மேலும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச இலக்கிய விழா சிறப்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு கோறளைப்பற்றுப் பிரதேச இலக்கிய விழா, மிகச் சிறப்பாக இடம்பெற்றது.கோறளைப்பற்று பிரதேச செயலகமும் பிரதேச அதிகார சபையும் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்தனபிரதே செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில்...

பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய பல்கலை மாணவர்கள் இடைநீக்கம்!

களனி பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடலரிப்பினால் அம்பாறை மாவட்டத்தின் அழகிய கடற்கரைச் சூழல் சிதைவடைந்து வருகிறது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் ஏற்படும் கடலரிப்பினால்;, கடற்கரைச் சூழல் சிதைவடைந்து வருவதோடு, மீனவர்களும்சொல்லனாத் துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.கரையோரப் பகுதிகளை அண்டிக் காணப்பட்ட தென்னந் தோப்புக்களும், கடலரிப்பினால் அழிவடைந்து வருவதால், தெங்குப்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச இலக்கிய விழா சிறப்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு கோறளைப்பற்றுப் பிரதேச இலக்கிய விழா, மிகச் சிறப்பாக இடம்பெற்றது.கோறளைப்பற்று பிரதேச செயலகமும் பிரதேச அதிகார சபையும் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்தனபிரதே செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில்...

பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய பல்கலை மாணவர்கள் இடைநீக்கம்!

களனி பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடலரிப்பினால் அம்பாறை மாவட்டத்தின் அழகிய கடற்கரைச் சூழல் சிதைவடைந்து வருகிறது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் ஏற்படும் கடலரிப்பினால்;, கடற்கரைச் சூழல் சிதைவடைந்து வருவதோடு, மீனவர்களும்சொல்லனாத் துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.கரையோரப் பகுதிகளை அண்டிக் காணப்பட்ட தென்னந் தோப்புக்களும், கடலரிப்பினால் அழிவடைந்து வருவதால், தெங்குப்...

அம்பாறை சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக ஏ.எச்.அல் ஜவாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக, சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.எச். அல் ஜவாஹிர்நியமிக்கப்பட்டுள்ளார்.சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக...

சீரற்ற காலநிலை: மலையக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...