வவுணதீவில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ஆறு மாடுகள் அரச உடமையாக்கல்(PHOTOS)

0
537

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் மாட்டுப்பட்டியில் இருந்த மாடுகளைத் திருடி சிறிய கென்டர் ரக வாகனத்தில் காத்தான்குடி பிரதேசத்திற்கு கடத்திச் சென்ற போது கைப்பற்றப்பட்ட ஆறு மாடுகள் அரச உடமையாக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாடுகளை உரிமையாளர் உரிமை கோராததை அடுத்து மாடுகள் நீதிமன்ற கட்டளையின்படி அரச உடையாக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

அரச உடமையாக்கப்பட்ட ஆறு மாடுகளும் இன்று அனுராதபுரம் அரச மிருகவைத்திய கால்நடை பண்ணைக்கு திணைக்கள வாகனத்தில் கெண்டு செல்லப்பட்டது.

வெசாக் மாத காலத்தில் இறைச்சிக்கு வெட்டுவதற்காக மாடுகள் திருடப்பட்டு கடத்திச் செல்லப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.