வவுனியாவின் 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது ஐக்கிய மக்கள் சக்தி!

0
5

வவுனியா மாவட்டத்தின் 5 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தி வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

அதற்கான கட்டுப்பணத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தவிசாளருமான முத்து முகமது, முன்னாள் நகர சபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப், ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினி உள்ளடங்கிய கட்சி முக்கியஸ்தர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.