வவுனியாவில் தீப்பற்றி எரிந்த வாகனங்கள்

0
38

வவுனியாவின் பூந்தோட்டம் பகுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் காரும் தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் சிறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்