2023 ஆம் ஆண்டுக்கான, கல்வி பொது தரா தர சாதாரண தர பரீட்சை பெறுபேறு, இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை, நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
நீண்ட கால தாமதத்தை எதிர்கொண்ட, கல்வி பொது தரா தர உயர் தர பரீட்சை, எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும்.அத்துடன், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில், பரீட்சைகள் யாவும், காலதாமதம் இன்றி உரிய நேரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.