வவுனியா வடக்கு நெடுங்கேணி பொதுச் சந்தை புதிய கட்டிடத்தொகுதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி பிரதேச பொதுசந்தை உள்ளூராட்சி திணைக்களத்தின் 71 இலட்சத்து 45 ஆயிரத்து 235 ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தொகுதி வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது பிரதேச சபை செயளாலர் சோதிநாயகி மணிவண்ணன், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர்.



