வவுனியா வைத்தியசாலையில் தாய் ஒருவருக்கு ஒரே சூலில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன.வவுனியா வைத்தியசாலையில் முதன்முறையாக பதவியாவைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு ஒரே சூலில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன.நேற்று இரவு பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிற்கு அறுவைச்சிகிச்சை மூலம் 4 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.
குறித்த தாயார் மகப்பேற்று வைத்திய நிபுணர் காமினியால் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வந்துள்ளதுடன், வைத்தியர் திலீபனால் சிசேரியன் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு நான்கு குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டுள்ளன. வவுனியா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்திருப்பது இதுவே முதன்முறையாகும்.
குறித்த தாயாரும் குழந்தைகளும் நலமாகவுள்ளதுடன், நான்கு குழந்தைகளும் சிறப்பு குழந்தை நலப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.