விக்கினேஸ்வரனுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மஹிந்த!

0
210

81 ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரனை இன்று நண்பகல் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அவருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்.

இதன்போது இருவரும் பொதுவான விடயங்களையிட்டுப் பேசிக்கொண்டபோதிலும், அரசியல் விவகாரங்கள் பேசப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. “பொதுமக்கள் தொடர்பாடலில் இலங்கையில் நீங்கள்தான் முதலாவது இடத்தில் இருக்கின்றீர்கள்” என விக்கினேஸ்வரன் இதன்போது பிரதமரிடம் தெரிவித்திருக்கின்றார்.