அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, கினிகத்தேனை – அம்பகமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸாரும், நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.
12.5 கிலோ நிறையுடைய 177 கொள்கலன்களும், 5 கிலோ நிறையுடைய 28 கொள்கலன்களும், 2.5 கிலோ நிறையுடைய 25 கொள்கலன்களும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனை அடுத்து குறித்த எரிவாயு கொள்கலன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.