25.3 C
Colombo
Monday, October 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டின் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம்- சுடத் சமரவீர

நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது என தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுடத் சமரவீர தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் அடுத்த சில நாட்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாததாக மாறலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டின் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை, தெரிவு செய்யப்பட்ட பகுதிகளிலேயே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் மக்கள தொடர்ந்தும் ஏனையவர்களுடன் அதிகளவில் தொடர்புகொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரணச்சடங்குகள் திருமணங்கள் மதநிகழ்வுகள் மூலம் கொரோனா ரைவஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles