அகிம்ஷா நிறுவனத்தினால் பயனாளிக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டது

0
208

அகிம்ஷா நிறுவனம் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கரடியனாறு கிராம சேவையாளர் பிரிவில் கரடியனாறு கொலனி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளிக்கு இன்று கையளிக்கப்பட்டது.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரின் சிபாரிசுக்கு அமைய கரடியனாறு கிராம சேவையாளர் ஊடாக கனடா ஐயப்பன் இல்ல பக்தர்களான சாந்த சொருபி,
சந்திர சேகரம் பிள்ளை ஆகியோரின் நிதி உதவியில் ஏறாவூர் பற்று கரடியனாறு கிராம சேவையாளர் பிரிவில் வறுமைக்கோட்டின் வாழும் பயனாளியான ஆறுமுகம் ஆனந்தி என்ற பயனாளிக்கு வீடு மற்றும் மலசலகூடம் வழங்கப்பட்டது.
கரடியனாறு கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் வசந்தராசா சாந்த ரூபன் தலைமையில் சமய வழிபாடுகளுடன் இடம் பெற்ற வீடு கையளிக்கும் நிகழ்வில்,
அதிதிகளாக கரடியனாறு போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பதினாயக, கரடியனாறு அபிவிருத்தி உத்தியோகத்தர் கிரிதாஸ்,
அகிம்சா சமூக நிறுவனத்தின் நிறைவேற்றுச் செயலாளர் ராஜ மோகன, அகிம்சா சமூக நிறுவனத்தின் தலைவர் விஜயராஜா, அகிம்சா நிறுவன நிதிக்குழு உறுப்பினர் புவின் ராஜ், பங்குடா வெளி சன சமூக நிலைய தலைவர் அல்பட் ஆகியோர் கலந்துகொண்டனர்.