அக்கரபத்தனையில், வறுமைக் கோட்பாட்டின் கீழ் வாழும் குடும்பம் ஒன்றுக்கு புதிய வீடு

0
115

மலையகம் எமது தாயகம் சமூக நல அமைப்பின் ஊடாக, நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை வேவர்லி தோட்டத்தில் வறுமை கோட்பாட்டின் கீழ் வாழும் பயனாளி ஒருவருக்கு புதிதாக வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு, கையளிக்கப்பட்டது.

மலையகம் எமது தாயகம் அமைப்பின் இரண்டாம் ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு குறித்த வீடு கையளிக்கப்பட்டது.

இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் மலையகத்தில் காணப்படுகின்ற பத்துக்கும் மேற்பட்ட சமூகநல அமைப்புக்கள், அக்கரப்பத்தனை வேவர்லி தோட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.