சிறுவர்களின் மனவளர்ச்சி, பேச்சாற்றல், சம்பாசனை மற்றும் சுற்றாடல் ஆளுமைகள், நடைமுறைகளை வளர்ப்பதற்கும் அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயத்தின் ஆரம்ப நிலை மாணவர்களுக்கான சிறுவர் சந்தை ஒன்று மிகக்கோலாகலமாக வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.
அதிபர் அப்துல் ஜலீல் தலைமையில் பெற்றார் நலன்விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்ற நிகழ்விற்கு அக்கரைப்பற்று வலய கல்விப் பணிப்பாளர் அஷேக் ஏ எம் ரஹ்மத்துல்லா நழிமி பிரதம அதிதியாக கலந்து கொண்டார் , கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பஸ்மில், ஏ எஸ் அஹமட் கியாஸ், சித்தி பாத்திமா, உதவிக் கல்விப் பணிப்பாளரான அம்ஜத் கான் ,கோட்டக்கல்வி பணிப்பாளரான உவைஸ் , இணைப்பாளர் ராஜி, ,ஆசிரிய ஆலோசகர் அவர்சுஹைஸ் ஆகியோரும் செயலாளர் ,இன்ஜினியர் ரமீஷ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
கிராமிய சூழலில் அமைந்த உணவு வகைகள்,இனிப்பு பதார்த்தங்கள், பண்டைய தற்போதைய உணவு வகைகள்கொண்ட ,உணவு விடுதிகள், இனிப்பு பதார்த்தங்கள், நாட்டு மரக்கறி வகைள், டேக் ஏவே ஹோட்டல்கள், கேக் கடைகள் இரும்பு தளபாடக்கடைகள், போன்ற கடைகள் சிறுவர்களின் முகாமைத்துவதில் இயங்கியதுடன் மக்கள் கூட்டமும் நிரம்பியிருந்தது.
அதிகளவிலான தாய்மார்கள் தமது குழந்தைகளின் திறமைகளையும், ஆற்றலையும் காண மிக உற்சாகத்துடன் வருகை தந்திருந்தனர்.
கூடாரங்களில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப்பொருட்களும் விற்பனையாகியமை குறிப்பிடத்தக்கது.