அக்கரைப்பற்று சின்னக்குளம் ஸ்ரீP வீரம்மாகாளியம்மன்; ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு திருவிழா இன்று திருக்கதவு திறக்கும் வைபவத்ததுடன் ஆரம்பமானது.கடந்த இரு வருடகாலமாக கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களால் அதிக பக்தர்கள் வருகை இன்றி இடம்பெற்ற அலங்காரத் திருச்சடங்கு இவ்வருடம் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்புடன் ஆரம்பமானது.அதிகாலை அம்மனுக்கான விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன் அம்மனின் திருக்கதவு பக்தர்களின் ஆரோகாரா எனும் வேண்டுதலுக்கு மத்தியில் திறந்தது.
கணபதி ஹோமம் மற்றும் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான திருச்சடங்கானது 30ஆம் திகதி அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து இடம்பெறும் பாற்குடபவனியுடனும் 01ஆம் 02ஆம் திகதிகளில் இடம்பெறும் அம்மனின் உள்வீதி உலா வருதலுடனும் 03ஆம் திகதி காவடி ஆட்டங்களுடன் இடம்பெறும் வெளிவீதி மற்றும் கிராம சுற்றுலாவுடனும்; 04ஆம் திகதி இடம்பெறும் சக்தி மகா யாகம் நோர்ப்பு நெல் நேர்தல் ஆகிய கிரியைகளுடனும் 05ஆம் திகதி அதிகாலை இடம்பெறும் பக்தி ததும்பும் தீமிதிப்பு 12ஆம் திகதி இடம்பெறும் எட்டாம் சடங்குடனும் நிறைவுறும்.
ஆலய தலைவர்; தலைமையில் இடம்பெற்ற திருக்கதவு திறக்கும் நிகழ்வினையும் வருடாந்த அலங்காரத் திருச்சடங்கினையும் ஆலய வழிபாட்டு பிரதான கிரியைகள் யாவற்றையும் ஆலய பிரதமகுரு க.சிவராசா, உற்சவகாலகுரு சிவத்திரு இ.யோகானந்தம் உள்ளிட்ட பிரதம குருமார்களாலும் சிவத்திரு சோ.கஜேந்திரன் சிவத்திரு யோ.மோகன்ராஜ் சிவத்திரு ஜெ.ஜெயரூபன் சிவத்திரு வி.நிசாந் உள்ளிட்ட உதவி பூசகர்களாலும் நடாத்தி வைக்கப்படவுள்ளதுடன் வாத்ம சாந்தி கிராம சாந்தி சக்தி பூஜை ஆகியவற்றை சிவஸ்ரீ சீ.கு.கௌரிசங்கர் குருக்களால் நடாத்தி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.