30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அக்கரைப்பற்று பிரதேச செயலக
மண்டபத்தில் மருத்துவ முகாம்

சர்வேதேச முதியோர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நேற்று அக்கரைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் எ.எம்.சமீம் தலைமையில் நடைபெற்ற இலவச முகாமில் குறித்த பகுதியை சேர்ந்த முதியவர்கள் தமது நீண்ட கால நோய்களான ஆஸ்துமா, நீரிழிவு, கொலஸ்ட்ரோல், மூட்டுவலி, போன்ற பல்வேறு நோய்களுக்குமான சிகிச்சிகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டனர்.

ஆயுர்வேத வைத்தியார்களான வைத்தியர் எம்.ஹையூ, வைத்தியர் சித்தி ஷமிலா மற்றும் சகமுக வைத்தியர் எம்.ரி அமீரா. போன்றோர் கலந்து கொண்டு நோயாளர்களின நோய் அவற்றுக்கான சகிச்சை முறைகள் மற்றும் ஆயுள்வேத மருந்துகளை வழங்கினர்.சிகிச்சை முகாம் ஏற்பாடுகளை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.ஏ. ரபீக்கா மேற்கொண்டிருந்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles