அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பூரணை திருக்குளிர்த்தி சடங்கின் அம்மன் வெளிவீதி உலா இன்று இடம்பெற்றது.
நேற்று மாலை மருதடிமாணிக்கப்பிள்ளையாரின் தரிசனத்துடன் ஆரம்பமான அம்மன் ஆரம்பமான வெளிவீதி உலாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வீதிகள் தோறும் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் கும்பங்கள் வைத்து அம்மனைபக்தர்கள் தரிசித்தனர்.அத்தோடு சிறப்புவழிபாடுகளாக பந்தல்கள் அமைக்கப்பட்டுசிறுவர்களின் கலாசார நடனநிகழ்வுகளும் நடைபெற்றது.
கொரோனா உள்ளிட்டபல்வேறுகாரணங்களினால் கடந்த சில வருடங்களாகசிறப்பாக நடைபெறமுடியாமல் தடைப்பட்டிருந்த அம்மன் ஊர்வலம் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மிக விமர்சையாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருக்குளிர்த்தி வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ
க.கஜமுகசர்மா மற்றும் ஆலய பிரதம பூசகர் மு.வரதராஜன் தலைமையிலான பூசகர்கள் நடாத்தி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான ஆலய உற்சவத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கும்பஉள்வீதி; வெளிவீதி உலாவுடனும் இன்று இரவு இடம்பெறும் கல்யாணக்கால் நடும் நிகழ்வுடனும் 14ஆம் திகதி இடம்பெறும் திருக்குளிர்த்தி மற்றும் பக்தர்களின் நேர்த்திக்கடன் பொங்கலுடனும் 16 நடைபெறும்;வைரவர்
பூஜையுடனும்,21ஆம் திகதி இடம்பெறும் எட்டாம் சடங்குடனும் நிறைவுறும்.