ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரனின் வழிகாட்டலில் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆலயங்களில் விசேட ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறும் அறிவறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் அக்கரைப்பற்று ஸ்ரீ மருதடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கஜமுக சர்மா மற்றும் வித்யாசாகரர் வாமதேவ சிவாச்சார்யார் சிவஸ்ரீ புண்யகிருஸ்குமார் குருக்கள் உள்ளிட்ட குருமார்கள் இணைந்து நடாத்திய யாக பூஜையில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் நிசாந்தினி தேவராஜ் ஆலய தலைவர் பெ.சோமசுந்தரம், செயலாளர் பா.சுதாகர் பொருளாளர் எஸ்.உமாகாந்தன் உள்ளிட்ட ஆலய நிருவாகத்தினர் கலந்துகொண்டனர்.