அக்கரைப்பற்று ஸ்ரீ அருள்மிகு வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின், ஆனிப் பௌர்ணமி மகோற்சவ தீர்த்தோற்சவம் நேற்று இடம்பெற்றது.
ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் கர்மாரம்ப கிரியைகள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகி தீர்த்தோற்சவம் கொடியிறக்கத்துடன் நேற்று நடைபெற்றது.
காலை பொற்சுண்ணம் இடிக்கும் கிரியைகளோடு தீர்த்தோற்சவ கிரியைகள் ஆரம்பமாகி யாக பூஜைகள், மூலமூர்த்திக்கான பூஜைகள், விசேட அலங்கார பூஜை நடைபெற்றன. ஆலயத்தலைவர் வி.சுகிர்தகுமார் தலைமையில் இடம்பெற்ற மகோற்சவ நிகழ்வில், அக்கரைப்பற்று பகுதி ஆதினகுரு இலி பழனிவேல் குருக்கள் ஆசியுடன் கிரியாகிரம ஜோதி அலங்கார பூசனம் சிவாகமபானு அகோர சிவாச்சாரியார் சிவஸ்ரீ சு.சுதர்சன் குருக்கள், ஆலய குரு ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மகோற்சவ தீர்த்தோற்சவத்தை நிகழ்த்தினர்