அசாத் சாலி வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்

0
227

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியால் தாக்கல் செயயப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவிலிருந்து ஒருவர் விலகியுள்ளார்.

உச்சநீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி ஆப்ரு, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய குழுவிலிருந்து, நீதியரசர் ஜனக் டி சில்வா விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக, மனுமீதான விசாரணைகளிலிருந்து தான் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

குறித்த மனு இன்று(2) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதியரசர் ஜனக் டி சில்வா விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த மனு மீதான விசாரணையை, எதிர்வரும் 14ஆம் திகதி ஒத்திவைப்பதற்கு உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.