மட்டக்களப்பு காத்தான்குடி பத்ரிய்யாஹ் ஜூம்ஆப்பள்ளிவாயலில் அஜ்மீர் ஹாஜா நாயகம் முயீனுத்தீன் சிஸ்தியின் 36 வருட கந்தூரி அண்ணதானம் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
கடந்த 17 ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் கடந்த இரண்டு இரவுகள் மௌலூது பாராயணம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று நேற்று மாலை கந்தூரி அண்ணதானம் வழங்கப்பட்டது.
காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலீம் வலியுல்லாஹ் நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மௌலானா மௌலவி அஷ்ஷெய்ஹ்
ஏ.ஜே.அப்துர் ரஊப் மினஸ்பாஹி தலைமையில் இந்த கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வின் போது சுமார் 15000. பேருக்கு சமைத்த உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த தந்தூரி அன்னதானம் வழங்கும். நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.டி.ராஜித சிறி தமிந்த
குருக்கள் மடம் இராணுவ முகாம் கட்டளை அதிகாரி புஸ்பகுமார,. மேஜர் அசேலயாப்பா, கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி ஐ.பி.ரஹீம். காத்தான்குடி நகர சபை பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உட்பட முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நீங்க வேண்டுமென வேண்டி விசேட துஆப் பிராத்தனையும் நடைபெற்றது.