அஞ்சல் ஊழியர்களின் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று பிற்பகல் ஆரம்பம்!

0
2

48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் நான்கு மணிக்கு ஆரம்பமாகவுள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு நாளை மறுதினம் நள்ளிரவு 12 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சேவையாளர் பற்றாக்குறை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.