அதிகரித்த உற்பத்திச் செலவுகள் காரணமாக உள்ளூர் சந்தையில் கேக், பாண் மற்றும் பணிஸ் போன்ற பேக்கரி உற்பத்திகளின் விற்பனை சுமார் 50 சதவீதமளவில் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், பட்டர் மற்றும் மாஜரின் விலைகள் 1000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு கிலோ ஒன்றிற்கு 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. எனவே உள்ளூரில் கிடைக்கும் முட்டை ஒன்றை 60 ரூபாவிற்கு வாங்கவேண்டிய நிலை உள்ளது. இந்நிலையானது பேக்கரி தொழிலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார்.
எனவே எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்கு முன்னர் பேக்கரி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான பொருட்களின் விலைகளைக் குறைத்து சலுகைகளை வழங்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.