அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காக இலத்திரனியல் அட்டைகள் (DEBIT CARD CREDIT CARD) மற்றும் QR CODE ஊடாக கட்டணங்கள் செலுத்தும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலத்திரனியல் அட்டைகளினூடாக கொடுக்கல் வாங்கல் செய்வதற்குரிய திட்டங்கள் இந்த வாரத்தில் கொட்டாவ மற்றும் கடவத்தை இடமாற்றப்பகுதிகளில் செயற்படுத்தப்படவுள்ளன.மே மாதம் முதல் இலங்கையில் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இலத்திரனியல் அட்டைகளின் ஊடாக கட்டணங்களை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எந்தவொரு மேலதிக கொடுப்பனவுகளுமின்றி அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் மக்களுக்கு அடுத்த மாதம் முதல் இந்த சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் எனப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்இ துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.