28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அத்துருகிரிய ஜெரோம் உள்ளிட்ட மூவர் கைது

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் அத்துருகிரிய ஜெரோம் உள்ளிட்ட 3 பேர் வெலிக்கடை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம பகுதியில், ரீ-56 துப்பாக்கியுடன் சிலர் நடமாடுவதாக காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயணித்த மகிழுந்து ஒன்றும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கைதானவர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles