அநுரவிற்கு, கென்யா ஜனாதிபதி வாழ்த்து!

0
65

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வில்லியம் ருட்டோ, தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த இராஜதந்திர உறவுகளை வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி திஸாநாயக்கவின் தெரிவு, அவரது தலைமையின் மீது இலங்கை மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வலுவான உறுதிப்படுத்தல் என அவர் சுட்டிக்காட்டினார்.

கென்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மற்றும் சுமூகமான உறவுகள், இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததில் இருந்து பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டு வருவதாக கென்ய ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வர்த்தகம், முதலீடு, காலநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, இந்த பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.