அநுராதபுரம் – அலையாபத்து – மாங்கடவளையில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும், இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் 30 வயதான தாய், 10 வயதான மகள் மற்றும் 5 வயதான மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளையும், மனைவியையும் காப்பாற்றச் சென்ற 37 வயதுடைய கணவர், தீக்காயங்களுடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அலையாபத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.