அந்நியத்தின் விலாசம் கவிதை நூல் அறிமுகம்

0
199

கவிஞர் குடத்தனையூர் சிவசேகரனின் அந்நியத்தின் விலாசம் எனும் கவிதை நூல் அறிமுக விழா குடத்தனை வடக்கு அகரம் வளாகத்தில் இடம்பெற்றது.

கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமார் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது மங்கல விளக்கேற்றப்பட்டு தொடர்ந்து வாழ்த்துரை இடம்பெற்றது.

தொடர்ந்து தலைமை உரை, விமர்சன உரை, ஏற்புரை என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து நூல் அறிமுகம் இடம்பெற்றது.

நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவகர் செபமாலை தோமஸ் ஜீட், எழுத்தாளர்களான பா.இரகுவரன், கவிஞர்களான வதிரி சி.இரவீந்திரன், சு.குணேஸ்வரன், தயாளினி நேமிநாதன், சிவசேகரன் புற்றளை மகா வித்தியாலய ஆசிரியர் யசோதா சிவகுமார், குடத்தனை வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி அனிதா தயாபரன், கவிஞர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், இலக்கியவாதிகள் மக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.