அனலைதீவில் போக்குவரத்து சேவையில் ஈடுபட புதிய பேருந்து வழங்கப்பட்டுள்ளது!

0
165

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை- அனலைதீவு போக்குவரத்து சேவைக்கு புதிய பேருந்து!
….
அனலைதீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு அமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் புதிய பேருந்து ஒன்று வழங்கா வைக்கப்பட்டுள்ளது.

அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, ஊர்காவற்றுறை பிரதேச சபையில் தலைவர் ஜெயகாந்தன் ஊடாக சந்தித்து தமது பிரதேத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரைச்சினைகள் உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கடந்த 19 ஆம் திகதி கலந்துரையாடியிருந்தனர் .

குறிப்பாக அனலைதீவில் மக்களின் போக்குவரத்திற்காக பாவனையில் இருந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து பழுதடைந்த நிலையில் இருப்பதினால் வைத்தியசாலைக்கு செல்பவர்கள் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களும் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தமக்கு புதிதாக ஒரு பஸ்வண்டியை தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

மேற்படி விடயங்களை கருத்தில் எடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடபிராந்திய போக்குவரத்து சபையின் பிரதான முகாமையாளர் குணபாலச்செல்வத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

அதன் பிரகாரம் இன்றைய தினம் யாழ்ப்பாண சாலை முகாமையாளர் குணசீலனினால் அனலைதீவுக்கு புதிய பேரூந்து ஒன்று கடற்படையினரின் உதவியுடன் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்றிலிருந்து மக்களின் போக்குவரத்தை ஆரம்பித்துள்ளது. –