அனுமதியற்ற முறையில் வீதி
ஓரங்களில் மீன் வியாபாரம் அகற்றப்பட்டது

0
203

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியின் வீதியின் இரு மருங்குகள் முக்கிய சந்திகளில் எவ்வித அனுமதியும் இன்றி மீன் விற்பனை செய்யப்பட்ட இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றும் நடவடிக்கையில் கல்முனை மாநகர சபையினர் ஈடுபட்டனர்.இதன் போது வீதியோரங்களில் மீன் விற்பனையாளர்களினால் போடப்பட்ட மேசைகள் உள்ளிட்ட தளபாடங்கள் மாநகர உழவு இயந்திரங்களில் ஏற்றி செல்லப்பட்டுள்ளன.

கடந்த 1 வருடமாக இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதனால் பிரதான வீதியில் பயணம் செய்பவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதுடன் இவ்வாறான மீன் விற்பனை வீதியை ஆக்கிரமிக்கும் அளவிற்கு சென்றுள்ளதுடன் வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டிருந்தனர்.புதிய சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ள விடயத்தை மாநகர சபை அதிகாரிகள் அவ்விடத்தில் வைத்து இவ்வாறு மீன் விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் அறிவுறுத்தல் வழங்கியதுடன் இனி வரும் காலங்களில் வீதிகளில் மீன்களை விற்பனை செய்ய வேண்டாம் என எச்சரிக்கையும் வழங்கியிருந்தனர்.