அனுர தீப்தி தொடர்ந்தும் விளக்கமறியலில்

0
94
ரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மருந்து இறக்குமதி நிறுவனமொன்றின் உரிமையாளரான அனுர தீப்தி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர், மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டார். இதன்போதே, அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.