ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார நிபுணர்கள் சங்கம் உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
சுகாதார சேவையில் 15 சதவீத சம்பள வெட்டு மற்றும் சேவையை பேணுவதற்கு தேவையான மருந்துகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை இரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து, சுகாதார தொழிற்சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.