நுவரெலியா, நல்லதன்னி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா, வாழமலை தோட்ட பகுதியில் இடம்பெற்ற திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதான உணவு ஒவ்வாமை காரணமாக 60 பேர் நேற்று மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைகளின் பின்னர் இன்று காலை வீடுதிரும்பியுள்ளனர்.
வாந்தி மற்றும் வயிற்றோட்டம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 60 பேரில் 32 பேர் நேற்று வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், மேலும் 28 பேர் இன்று காலை வீடு திரும்பியுள்ளதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Home மலையக செய்திகள் அன்னதான உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்பினர்