ஆரம்ப சுகாதார சேவையின் வலுப்படுத்தும் செயல்பாட்டின் ‘உங்களது வாழ்வில் புத்தொளி’ எனும் திட்டத்தின் ஊடாக தொற்றா நோய்களை ஒழிப்போம் மகிழ்வான வாழ்வை பெறுவோம் எனும் தொனிப்பொருளில் 35 வயதை கடந்தவர்களுக்கான தொற்றா நோய்களுக்குரிய மருத்துவ முகாம் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலையின் ஆரம்ப சுகாதார சிகிச்சை பிரிவின் ஏற்பாட்டில் லயிட் ஹவுஸ் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் நடைபெற்ற தொற்றா நோய்களுக்குரிய மருத்துவ முகாமில் கொலஸ்ரோல் பரிசோதனை ,சீனி நோய்க்கான இரத்த பரிசோதனை , ஈமோகுளோபின் இரத்த பரிசோதனை ,சிறு நீரக நோய் தொடர்பான பரிசோதனை ,குருதி வகை பரிசோதனை போன்றவை பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன .
பாலமீன் மடு பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் தலைமையில் நடைபெற்ற தொற்றா நோய்களுக்குரிய மருத்துவ முகாமில் பாலமீன் மடு . மட்டிக்களி ,அமிர்தகழி , திராய் மடு , புன்னைச்சோலை ,முகத்துவாரம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவு மக்கள் கலந்துகொண்டனர்