29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, இவ் ஆண்டு வலுவிழக்கும்

அமெரிக்க டொலருக்கு எதிராக குறிப்பிடத்தக்க வகையில் வலுவடைந்து வரும் ரூபாயின் மதிப்பு, இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ரூபாயின் மதிப்பு 23 வீதத்தால் குறையும் என்று பிற்ச் பினான்சியல் சொலுசன்ஸ் அமைப்பை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் இணையதளம் தெரிவித்துள்ளது.

பிற்ச் பினான்சியல் சொலுசன்ஸின் இடர் ஆய்வாளர் செவாங்டின் கூறுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் தொகைக்கு இலங்கை அதன் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலை பெற்றாலும், நிதி திட்டத்திற்கு இணங்குவது கடினமான சவாலாக இருக்கும்.

வெளிநாட்டுக் கடனை அடைப்பதற்காக கையிருப்பு அதிகரிக்க வேண்டிய அவசியம், பலவீனமான பொருளாதாரம் மற்றும் எதிர்வரும் தேர்தல்கள் இதற்கு தடையாக இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இந்த வருட இறுதிக்குள் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 390 ரூபாயாக வீழ்ச்சியடையலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles