அம்பாரை மாவட்ட ராம் கராத்தே சங்கத்தின் சிரேஸ்ட போதானாசிரியர்கள் மற்றும் கனிஷ்ட கறுப்புப்பட்டி மாணவர்களுக்கான விசேட பயிற்சி வகுப்பு அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதான உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
இவ்விசேட பயிற்சி செயலமர்வில் மாவட்டத்தை சேர்ந்த சிரேஸ்ட போதானாசிரியர்கள் மற்றும் கனிஷ்ட கறுப்புப்பட்டி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதானசிரியருமான சிகான் கே.கேந்திரமூர்த்தி தலைமையில் நடாத்தப்பட்ட இப்பயிற்சி வகுப்பில் புதிய பல கராத்தே நுணுகங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன.
இதேநேரம் இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் இணையவழி மூலமாக 2021 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட 46 வயது தொடக்கம் 50 வயது வரைக்குட்பட்ட ஆண்களுக்கான காட்டாவில் 02ஆம் நிலைபெற்ற ராம்கராத்தே சங்கத்தின் சிரேஷ்ட கறுப்புபட்டி வீரர் துரையப்பா பாலகிருஷ்ணனுக்கான சான்றிதழ் சிகான் கே.கேந்திரமூர்த்தியினால் வழங்கப்பட்டது.